பெரம்பூர் மேம்பாலப் பூங்கா
இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள சென்னை நகரில் உள்ள ஒரு பூங்காமுரசொலி மாறன் மேம்பாலப் பூங்கா அல்லது முரசொலி மாறன் பூங்கா இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் பகுதியில் அமைந்துள்ளது. சென்னை பெரம்பூரில் இருந்து ஓட்டேரி, புரசைவாக்கம், எழும்பூர், சென்டிரல் உள்ளிட்ட பகுதிகளுக்கு நெரிசல் இன்றி வாகனங்கள் செல்வதற்காக பெரம்பூர் மேம்பாலம் கட்டப்பட்டது. சென்னையின் இம்மேம்பாலத்திற்கு கீழே அமைந்துள்ளது. கூடிய திறந்த வெளி உடற்பயிற்சி நிலையம், அனைவரும் பயன்பெறும் வகையில், தரைஓடுகள் பதித்த நீண்ட வட்ட வடிவிலான நடைபாதை, நீரூற்றுகள், இயற்கைப் புல்வெளிகள், அலங்கார விளக்குகள், சாய்வு இருக்கைகள், மிக உயரமான பன்முக விளக்குக் கம்பம், மனதிற்கு இதமளிக்கும் பூக்கள் மலர்ந்த செடிகள் மற்றும் மரங்கள் என பல சிறப்பம்சங்கள் கூடிய இப்பூங்கா, பெரம்பூர் தொடருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது இன்னொரு சிறப்பு.




